செங்கல்பட்டு:
சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று புதிதாக 139 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,285 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 34,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கையும் 307-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 24,545 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 244-ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அங்கு ஏற்கனவே 2,146 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,285 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.