இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 276583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9985 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 279 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7745 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 90787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34914 பேருக்கும், டெல்லியில் 31309 பேருக்கும், குஜராத்தில் 21014 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மற்றும் வைரசை கட்டுப்படுத்துவதில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றும், ஆனால் அதில் மன நிறைவு அடைய முடியாது.
தனி மனித இடைவெளி, முக கவசம், கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளே கொரோனாவை தடுக்கும் சமூக ஆயுதம் என ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.