டெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவல் மேலும் 9,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 7,466-ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள்ளது.
கொரோனா பாதிப்பு அதில் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம் 2வது இடத்திலும், தலைநகர் டெல்லி 3 வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலும் தீவிரமடைந்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை (09-06-2020) 10 மணி அளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிகையில் கூறியிருப்பதாவது,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,611-லிருந்து 2,66,598-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 331 பேர் பலியான நிலையில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையானது 7,466-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095-லிருந்து 1,29,215-ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மஹாராஷ்டிரா: மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 88,528, பலி எண்ணிக்கை – 3,169
தமிழகம்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 33,229, பலி எண்ணிக்கை – 286
டில்லி: மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 29,943, பலி எண்ணிக்கை – 874
குஜராத்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 20,545 , பலி எண்ணிக்கை- 1,280
உத்தர பிரதேசம்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை – 10,947 – 283
ராஜஸ்தான்: மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 10,763, பலி எண்ணிக்கை – 246
மத்திய பிரதேசம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 9,638, பலி எண்ணிக்கை – 414
மேற்கு வங்கம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 8,613, பலி எண்ணிக்கை – 405
கர்நாடகா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 5,760, பலி எண்ணிக்கை – 64
பீஹார் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 5,202 , பலி எண்ணிக்கை- 31
அரியானா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 4,854, பலி எண்ணிக்கை – 39
ஆந்திரா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 4,851, பலி எண்ணிக்கை – 75
காஷ்மீர் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 4,285, பலி எண்ணிக்கை – 45
தெலுங்கானா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 3,650, பலி எண்ணிக்கை – 137
ஒடிசா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 2,994, பலி எண்ணிக்கை – 9
அசாம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 2,776, பலி எண்ணிக்கை – 4
பஞ்சாப் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 2,663, பலி எண்ணிக்கை – 53
கேரளா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 2,005, பலி எண்ணிக்கை – 16
உத்தரகாண்ட் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 1,411, பலி எண்ணிக்கை – 13
ஜார்க்கண்ட் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 1,256, பலி எண்ணிக்கை – 7
சத்தீஸ்கர் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 1,160, பலி எண்ணிக்கை – 4
திரிபுரா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 838, பலி எண்ணிக்கை – 0
ஹிமாச்சல பிரதேசம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 421, பலி எண்ணிக்கை – 5
கோவா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 330, பலி எண்ணிக்கை – 0
சண்டிகர் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 317, பலி எண்ணிக்கை – 5
மணிப்பூர் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 272, பலி எண்ணிக்கை – 0
புதுச்சேரி : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 127, பலி எண்ணிக்கை – 0
நாகலாந்து : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 123, பலி எண்ணிக்கை – 0
லடாக் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 103, பலி எண்ணிக்கை – 1
அருணாச்சல பிரதேசம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 51, பலி எண்ணிக்கை – 0
மிசோரம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 42, பலி எண்ணிக்கை – 0
மேகாலயா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை -36, பலி எண்ணிக்கை-1
அந்தமான் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 33, பலி எண்ணிக்கை – 0
தாதர் மற்றும் நாகர் ஹவேலி : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 22, பலி எண்ணிக்கை – 0
சிக்கிம் : மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 7, பலி எண்ணிக்கை – 0