சென்னை:

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இதை தடுக்க மண்டலம் வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் தேவையை கருவி, முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்களை தமிழக சுகாதாரத்துறை நியமித்து உள்ளது. அவர்கள்  சென்னையில் உள்ள  பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும்,  முதுநிலை மருத்துவம் படித்து முடித்தவர்கள் என்று கூறப்படுகிறது.,

முதுநிலை மருத்துவ படிப்பை 3 ஆண்டு படித்து வந்தவர்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் இறுதி தேர்வுகள்  கொரோனா மற்றும் ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆண்டுகள் படிப்பு முடிந்தும், இறுதி தேர்வு எழுதாமலே 1000 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.