பெங்களூர்:

ர்நாடக மாநில ராஜ்யசபா வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான  மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி அறிவித்து உள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

நாடு முழுவதும் காலியாக உள்ள  24 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கர்நாடகா மாநிலத்தில் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநில  எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அணிக்கு 2 ராஜ்யசபா இடங்களும், பாஜக கூட்டணிக்கு இரு இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்க உள்ள 2 இடங்களில் ஒன்று ஜேடிஎஸ் கட்சிக்கு வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மற்றொரு இடத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஜேடிஎஸ்கட்சி சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவரான முத்தஹனுமே கவுடாவை ராஜ்யசபா  போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.