மே.வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தைக்கு அதன் தாயாரால், பால் கொடுக்க முடியாத சூழல்.

காரணம்?

அந்த பெண்ணுக்கு பால் சுரப்பி வேலை செய்யவில்லை.

பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தை பாலுக்காக அழுது கொண்டே இருந்தது.

அப்போது இரவு பணியில் இருந்த நர்ஸ் உமா என்பவரால், குழந்தையின் அழுகையை பொறுக்க முடியவில்லை.
அந்த நர்சும் அப்போது தான் குழந்தை பெற்றிருந்தார்.

மருத்துவமனையில் யாரோ பெற்ற குழந்தை பாலுக்கு அழுதபோது நர்ஸ் உமாவால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

அந்த குழந்தையை வாரி அணைத்து தாய்ப்பால் ஊட்டி, பசி போக்கி அழுகையை நிறுத்தினார்.

சிறிது நேரத்தில் உமாவின் கணவன் வீட்டில் இருந்து போன் செய்துள்ளார்.

பாலுக்கு குழந்தை அழுவதால் கணவன் போன் செய்கிறார் என்பது உமாவுக்கு தெரியும்.
போனை எடுக்கவில்லை.

ஆனாலும் ‘’ நான் வேறொரு குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருக்கிறேன். நாளை காலை நமது குழந்தைக்கு பாலூட்ட வந்து விடுகிறேன்’’ என்று கணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, வேலையில் மூழ்கினார் நர்ஸ் ’’தாயம்மா’’

– பா.பாரதி