சென்னை:
தமிழகத்திற்குள்ளும் வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது குறித்து, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறம் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், வெட்டுக்கிளிகள் மற்றொரு புறம் மிரட்டி வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் இதுவரை வட மாநிலங்களான ராஸ்தான், உ.பி.யில் தனது ஆட்டத்தை தொடர்ந்த நிலையில், சமீப நாட்களாக கேரள பகுதிக்குளும் பயிர்களை சேதப்படுத்திய நிலையில், தமிழக எல்லைக்குள்ளும் புகுந்துள்ளது. சேலம் அருகே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பயிர்களை சூறையாடி வருகிறது.
ஆனால், இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால், வெட்டுக்கிளிகள் கூட்டம் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுவதால், அதன் தாக்கத்தில் இருந்து தமிழக விவசாய பயிர்களை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.