ஒரே நாளில் பல முறை மேக்கப்பை மாற்றும் சந்தானம்..

ஹீரோவாக நடிப்பதில் முனைப்புக் காட்டிவரும் காமெடி நடிகர் சந்தானம், இப்போது நடிக்கும்’ டிக்கிலோனா’’ படம் அவருக்கு  ரொம்பவும் ‘ஸ்பெஷல்’.
ஏன்?
அந்த படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.
ஹுரோ, வில்லன், மற்றும் காமெடியன் ஆகிய மூன்று வேடங்களையும் அவரே செய்கிறார்.
இந்த படத்தின் ஷுட்டிங் நடக்கும் போது 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அவர் ’’மேக்கப்’ மாற்றுகிறார்.
அதாவது ஒரு நாளைக்கு எண்ணற்ற  தடவை மேக்கப்பை கலைத்துக் கலைத்து வேறு வேடத்துக்குத் தன்னை தயார் செய்து கொள்கிறார்.’
அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகும் ‘டிக்கிலோனா’’ முழு பொழுதுபோக்கு படமாகும்.
இந்த படத்தில் யோகிபாபு, கிறுக்கு விஞ்ஞானியாக நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளாராம்.
– பா.பாரதி