புதுடெல்லி: கோவிட்-19 சூழலில் நாடு திரும்புவதற்கு விரும்பும் இந்தியர்கள், அந்தந்த நாட்டு இந்திய தூதரகத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு செயல்பாடானது, வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை திரும்ப அழைக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய ஒரு தகவல் தொகுப்பு என்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனிநபரும் தனியான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். குடும்பம் என்று வரும்போது, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நிறுவனங்கள் என்றால், ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனி படிவம் நிரப்பப்பட வேண்டும்.
இதுதொடர்பான மேலதிக அறிவிப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்ட இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்டிலிருந்து புறப்படுகையில், அங்கு நடைமுறையிலிருக்கும் விதிகள் மற்றும் இந்தியா வந்து சேர்ந்தவுடன் இங்கு நடைமுறையிலிருக்கும் விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டுமென்றும் (குறிப்பாக கோவிட்-19 தொடர்பானவை) கூறப்பட்டுள்ளது.
 
நாடுகள் & பதிவுக்கான இணைப்புகள்:
ஐக்கிய அரபு அமீரகம்: https://www.cgidubai.gov.in/covid_register/
சவூதி அரேபியா: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_yyVAYPD-VYH98RNOWZkDkGKVsf34qnu0oGoLdtts3RG7_Q/viewform
ஓமன்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfh_FmNRLorssEjf5w0ciMc0TgxjOuFFdB-Au_qxauEzaTzYQ/viewform
கத்தார்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYgQkLLvA0GvHh5dm_QEDSzqI6S8TuYGJ49JsByTnOlZ6EcA/viewform
குவைத்: https://indembkwt.com/eva/
பஹ்ரைன்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScDg2kCuhQ4LPo2zwEYXwNXNeDcAR-22IM0wJCAK4Ok0emo4Q/viewform