அனுஷ்கா சர்மா தயாரிப்பில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது ‘பாதாள் லோக்’ ‘Paatal Lok’ வெப் சீரிஸ்.
இந்துத்துவ அரசியல், சாதிய ஏற்றத்தாழ்வு, காவல்துறை சிஸ்டம், ஊடக அரசியல் என்று பல விஷயங்களை இந்த தொடர் சுக்கு நூறாக உடைத்துப் போட்டுள்ளது.
சுமார் 7 மணி நேரம் ஓடக்கூடிய மொத்த தொடரும் தற்போதைய அரசியல் சூழலுக்கு பொருந்தியதால் அனைவரின் பார்வையையும் பெற்றுள்ளது .
இந்த சீரிஸுக்கு எதிராக ஏற்கனவே வலதுசாரி ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கூர்க்கா இன மக்களை இந்த தொடரில் இழிவு படுத்தியதாக டார்ஜிலிங் பாஜக எம்.பி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் கதைப்படி, உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ஒருவர் சாலைகளை திறந்து வைக்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருக்கும். நிஜத்திலும் அதேபோன்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், சாலைகளை திறந்து வைக்க எம்.எல்.ஏ நந்கிஷோர் குர்ஜார், அவரின் பின்னால் நிற்பார். ‘பாதாள் லோக்’ சீரிஸிலும் நந்கிஷோரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.இதனால், தன் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், குர்ஜார் சமூக மக்களை தொடரில் தவறாக சித்தரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.