டில்லி
கொரோனா குறித்த சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின் வாங்காது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் அமலாக்கப்பட்ட நான்கு கட்ட ஊரடங்கால் பொருளாதாரம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்ட்ங்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தர்ர். அதையொட்டி அந்த் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து பகுதிகளாக விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த கடன் வழங்குதல், பொருளாதார சீரமைப்பு நட்வடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் விவராங்கள் குறித்து பாஜக தலைவர் நளின் கோலியிடம் காணொளி மூலம் ஆற்றிய உரையை இணையத்தில் நிதி அமைசர் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த உரையில் நிர்மலா சீதாராமன், ”பொதுத் துறை வங்கிகள் மூலம் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிடுங்கள் என்று வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வங்கிகளின் பொது மேலாளர்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளன. இந்த கடன்களுக்கு 100 % மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதால், வங்கிகள் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் கொடுத்த வங்கியோ அல்லது வங்கி அதிகாரிகளோ கடன்களை வசூலிக்காவிட்டால் அவர்களை அரசு வலுக்கட்டாயமாக இழுக்காது. நான் இந்த விஷயத்தை வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். வங்கி அதிகாரிகள், வங்கிகள் கடன் கொடுத்தது தவறாக அமைந்து இழப்பு ஏற்பட்டால் 100 சதவீதம் அரசு பொறுப்பேற்கும். ஆதலால், வங்கி அதிகாரியோ அல்லது வங்கியோ எந்தவிதமான அச்சமும் இன்றி, தகுதியான வாடிக்கையாளர்களுக்கு தயக்கமின்றி கடன் வழங்கலாம்.
கூடுதலாகக் கடன் பெறுவதற்கும், செயல்பாட்டுக் கடன் பெறவும் ஒவ்வொருவரும் தகுதியானவர்கள். வங்கித்துறை எடுக்கும் நல்ல முடிவுகள் கூட சிபிஐ, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு (சிவிசி), மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) ஆகிய 3 ‘சி’ க்களைப் பற்றிய அச்சத்தால் அந்த முடிவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள். அந்த 3 ‘சி’ க்களைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றி தகுதியானவர்களுக்கு கடன் கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளேன்.
குறிப்பிட்ட துறைகளின் முன்னேற்றதுக்காக மட்டும் மத்திய அரசு திட்டங்களை வகுக்காமல் முழுமையான வளர்ச்சிக்காகவே திட்டங்களை வகுக்கிறது. வேளாண் துறை, மின்துறை தவிர்த்து மற்ற துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. குறு, நடுத்தர நிறுவனங்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துத் துறைகளுக்கும் சேர்த்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1-ம் தேதி முதல் வங்கிகள் எந்தவிதமான பிணையும் இன்றி வாடிக்கையாளர்ளுக்குக் கடன் வழங்கும் பணியை விரைவாகத் தொடங்குவார்கள் என நம்புகிறேன். அதன்பின் பணப்புழக்கம் அதிகரித்து பொருளதாரம் வேகமெடுக்கும். கடன் வழங்கும் வழிமுறையும் எளிதாக இருக்கும். நேரடியாக வங்கி அதிகாரிகளைச் சந்திக்காமல் டிஜிட்டல் முறையிலேயே கடன் வழங்கப்படும். அரசை பொறுத்தவரை கொள்கை முடிவுகளில் எப்போதும் கதவை மூடி பின் வாங்காது.” என தெரிவித்துள்ளார்.