புதுடெல்லி: இம்மாதம் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கவுள்ள நிலையில், சத்தீஷ்கர் மற்றும் மராட்டிய மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பயணிகளுக்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல், விமானப் போக்குவரத்தை துவக்குவது ஆபத்தில் முடியும் என்று அம்மாநிலங்கள் எச்சரித்துள்ளன.
சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகல் விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “முறையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்து அவற்றை அமல்படுத்தாமல், விமானம் மற்றும் ரயில் வழிகளை மத்திய அரசு திறக்கக்கூடாது.
பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம். பயணிகளின் தொடர்பு விபரங்கள் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட வேண்டும். கொரோனா எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசின் இத்தகைய முடிவு பேராபத்தில் முடியும்” என்று எச்சரித்துள்ளார்.
ஊரடங்கின் காரணமாக, மும்மை விமான நிலையத்தில் எந்த வணிக விமானங்களும் மும்மை விமான நிலையத்தில் தரையிறங்கவோ அல்லது அங்கிருந்து புறப்படவோ முடியாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.