டோக்கியோ: ஜப்பானின் 8 மாகாணங்கள் தவிர்த்து, பிற மாகாணங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய நாடான ஜப்பானில், கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள 47 மாகாணங்களில், டோக்கியோ மற்றும் ஒசாகா உள்ளிட்ட 8 மாகாணங்களைத் தவிர, மற்ற மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள், மீண்டும் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பியுள்ளனர். திட்டமிடப்பட்டதை விட, 2 வாரங்களுக்கு முன்னதாகவே கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஜப்பானில் 16 ஆயிரத்து 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நோய்க்கு 768 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 11 ஆயித்து 564 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.