டில்லி
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் குறித்த இறுதிக் கட்ட அறிவிப்பை இன்று நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்

ஊரடங்கின் 3 ஆம் கட்டம் முடிவதை ஓட்டி பிரதமர் ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டத்தை அறிவித்தார். இதற்கான விளக்கங்களை நிதி அமைச்சர் அளிப்பர் எனவும் அவர் தெரிவித்தார். அவ்வகையில் நிதி அமைச்சர் தொடர்ந்து தினமும் பகுதி பகுதியாக விளக்கம் அளித்து வருகிறார்.
அவ்வகையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள முக்கிய விவரங்கள் வருமாறு.
ஊரடங்கு நடைபெறுவதால் ஆனலைன் மூலம் கல்வி வழங்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அதன்படி ஆன்லைனில் 200 பாடபுத்தகங்கள் இ பாடசாலை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் கல்வி பயில ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி சேனல் என 12 சேனல்கள் தொடங்கப்பட உள்ளன.
இணைய வசதி இல்லாதோர் டிடிஎச் மூலம் இந்தச் சேவையைப் பெறலாம். தினமும் 4 மணி நேரம் டிடிஎச் நிற்வன்ங்கள் ஒளிபரப்ப வேண்டும் 100 முன்னணி பல்கலைக் கழகங்களுக்கு இணையம் மூலம் மே மாதம் 30 தேதி முதல் பாடம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
செவித் திறன் மற்றும் பார்வைத் திறன் குறைந்தோருக்கான சிறப்பு இ புத்தகங்கள் உருவாக்கப்படும்.
இன்று அறிவிக்கப்படும் 7 அறிவிப்புக்களில் 5 பொருளாதார வளர்ச்சி குறித்ததாகும்.
சுகாதார திட்டங்களுக்காக ரூ. 15000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
இதுவரை87 லட்சம் என் 95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 11.08 கோடி ஹைட்ரோகுளோரோகுவின் மாத்திரைகள் வழங்கபட்டுளன. நாட்டின் 300க்கும் மேற்பட்ட தொழிலகங்களில் கொரோனா பாதுகாப்புக்கான பி பி இ உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா காரணமாக கடன் தொகை செலுத்தாதோர் தவணை தவறியாதாக் கருதப்பட மாட்டாது.
திவால் சட்டத்தின் கீழ் சிறு குறு தொழில் நடத்துவோருக்கு தனி தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.
நிறுவனங்கள் திவாலானதாக ஆறிவிக்க ரூ. ஒரு கோடி ரூபாய் வரை நிறுவனங்கள் பாக்கி வைத்திருக்க வேண்டும். முந்தைய ரூ. 1 லட்சம் வரம்பு தற்போது ரூ. 1 கோடி ஆக்கபட்டுளது. நிறுவனங்கள் திவாலாகும் சட்டங்களில் மாறுதல் செய்யப்படுகிறது. இவற்றில் 7 விதிமீறல்களுக்கான நடவ்டிக்கைக்ள் கைவிடப்பட்டு 5 விதிமிறல்கலுக்கு மற்று ஏறபாடு செய்யப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனக் கொள்கையில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்ய முடிவு. உத்தி சார்ந்த துறை தவிர் மற்ற அனைத்திலும் தனியார் நிறுவனங்கள் பங்கு பெற அனுமதி, உத்தி சார்ந்த துறையிலும் ஒரே நிறுவனத்தை மற்றவற்றில் தனியார் பங்கீட்டுக்கு அனுமதி.
வருமான பங்கீட்டில் மாநில அரசுகள் துயருறுவதால் மத்திய அரசின் வருமானம் மிகவும் குறைவாக உள்ள போதிலும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த ஏப்ரல் மதத்துக்கான மாநில வரி பங்கீடு ரூ.43,003 கோடி முழுமையாக வழஙகப்படுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு அளிக்கபட்டுளது. இதைத் தவிர கொரோனா த்டுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ,4113 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பற்றாக்குறைக்காக ரூ. 12390 கோடி வழங்கப்பாட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் வரம்பு 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் மாநிலங்கள் வேண்டுகோளுக்காக ஜிடிபியில் 3% வரை கடன் பெற முடியும் என இருந்த வரம்பை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் ரூ.4.28 லட்சம் கோடி கூடுதல் கடன் பெற முடியும்,
இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. முதல் 0.5% அதாவது 3.5% ஜிடிபி வரை கடன் பெற நிபந்தனைகள் இல்லை அதன் பிறகு 1% அதாவது 3.5 முதல் 4.5 % வரை கடன் பெற மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன், மின் விநியோகம், தொழில் தொடங்க ஏதுவான சூழல் போன்றவற்றில் எதையாவது இரண்டை அமல்ப்டுத்தினால் கிடைக்கும். மூன்றையும் அமல்படுத்தினால் கடைசி 0.5% கடன் பெற முடியும்.
Patrikai.com official YouTube Channel