டில்லி
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண உதவிகள் குறித்த நான்காம் கட்ட அறிவிப்பை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்
ஊரடங்கின் 3 ஆம் கட்டம் முடிவடைதை ஓட்டி பிரதமர் ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டத்தை அறிவித்தார். இதற்கான விளக்கங்களை நிதி அமைச்சர் அளிப்பர் எனவும் அவர் தெரிவித்தார். அவ்வகையில் நிதி அமைச்சர் தொடர்ந்து தினமும் பகுதி பகுதியாக விளக்கம் அளித்து வருகிறார்.
அவ்வகையில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள மாநிலங்க்ளுக்கான முக்கிய விவரங்கள் வருமாறு.
வருமான பங்கீட்டில் மாநில அரசுகள் துயருறுவதால் மத்திய அரசின் வருமானம் மிகவும் குறைவாக உள்ள போதிலும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த ஏப்ரல் மதத்துக்கான மாநில வரி பங்கீடு ரூ.43,003 கோடி முழுமையாக வழஙகப்படுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு அளிக்கபட்டுளது. இதைத் தவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ,4113 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பற்றாக்குறைக்காக ரூ. 12390 கோடி வழங்கப்பாட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன வரம்பு 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் மாநிலங்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஜிடிபியில் 3% வரை கடன் பெற முடியும் என இருந்த வரம்பை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் ரூ.4.28 லட்சம் கோடி கூடுதல் கடன் பெற முடியும்,
இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. முதல் 0.5% அதாவது 3.5% ஜிடிபி வரை கடன் பெற நிபந்தனைகள் இல்லை அதன் பிறகு 1% அதாவது 3.5 முதல் 4.5 % வரை கடன் பெற மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன், மின் விநியோகம், தொழில் தொடங்க ஏதுவான சூழல் போன்றவற்றில் எதையாவது இரண்டை அமல்ப்டுத்தினல் கிடைக்கும். மூன்றையும் அமல்படுத்தினால் கடைசி 0.5% கடன் பெற முடியும்” என அறிவித்துள்ளார்.