டெல்லி:
செல்போன் மூலமும் கொரோனா பரவுகிறது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளனர். இது நவீன கால இளம்தலைமுறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனை அதிக அளவு உபயோகப்படுத்துவதால், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மூலம் ஆண்மைக்கோளாறு உள்பட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் எச்சரித்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது கொரோனா பரவுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா  வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
செல்போன் ஒருவருடைய  வாய் மற்றும் கையுடன் நேரடியான தொடர்பில் இருப்பதால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்,   மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் செல்போனை வாங்கி பேசுவது போன்ற காரணங்களால் கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளனர்.
இன்றைய  இளம்தலைமுறையினர் 24 மணி நேரமும் செல்போன் உபயோகித்து வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவர்களின் இந்த ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.