கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 12ம் வகுப்பின் கடைசி தேர்வு போன்றை ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகளின் வசதிக்காகவும், அவர்களை தேர்வுக்கு அழைத்து வரவும், தேர்வு முடிந்த பின்னர் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்,, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வு ஜூன் 2-ம் தேதியும், 12-ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜுன் 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மே 17ந்தேதிக்கு பிறகு 50 சதவிகித பேருந்துகளே இயங்கும் என தமிழகஅரசு அறிவித்திருந்தது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிக்கல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் டிவிட் போட்டுள்ளார். அதில்,
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.