சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன்  12ம் தேதி வரை  நடைபெறும் என்று தமிழக  பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10வது வகுப்பு பொதுத்தேர்வு உள்பட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்தியாவின் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா தாக்கம் தீவிரமாகி உள்ள நிலை யில் பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிம் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தமிழகத்தில் 10ம வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதியை அறிவித்தார்.
அதன்படி, ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன்  12-ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :
ஜூன் 1- மொழிப்பாடம்
ஜூன் 3- ஆங்கிலம்
ஜூன் 5- கணிதம்
ஜூன் 6- விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8- அறிவியல்
ஜூன் 10- சமூக அறிவியல்
ஜூன் 12- தொழிற்பிரிவு தேர்வு