தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஆனால் மற்றொருபுறம் தமிழகஅரசு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இதற்கிடையில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில், ஊரடங்கு முடிவடைய உள்ள 17-ம் தேதிக்கு பிறகு போக்குவரத்து உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக,, வரும் 13-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே முதல்வர் எடப்பாடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடைந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.