டில்லி

ரடங்கு நாட்களில் இந்தியர்கள் எந்த சமையல் குறிப்புக்களைத் தேடினர் என்பது குறித்த விவரங்களைக் கூகுள் வெளியிட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது  அதன் பிறகு இருமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது இந்த மாதம் 17 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.  இதனால் பலரும் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்க நேரிட்டுள்ளது.

இதையொட்டி பலரும் பல வித உணவுகளை உண்ண ஆர்வம் காட்டி உள்ளனர்.  ஆகவே பலரும் இந்த  உணவுகளைச் செய்ய சமையல் குறிப்புக்களை இணையத்தில் தேடி உள்ளனர்.   சென்ற மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துள்ளது.  அப்போது தேடப்பட்ட விவரங்களைக் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

முன்பு தேடப்பட்டதை விட மிக அதிக அளவில் அதாவது 5000% அதிகமாக டல்கோனா காப்பி செய்யும் முறை தேடப்பட்டுள்ளது.  அடுத்ததாக சிக்கன மோமோ செய்யும் சமையல் குறிப்பு தேடல் 4350% ஆகவும் மேங்கோ ஐஸ்கீரிம் செய்முறை தேடல் 3250%  அதிகரித்துள்ளன.

இதைத் தவிர கேக், சமோசா, ஜிலேபி, மோமோ, தோக்ளா, பானிபூரி, தோசை, பனீர் மற்றும் சாக்லேட் கேக் உள்ளிட்ட பொருட்களின் செய்முறையும் அதிக அளவில் தேடப்பட்டுள்ளன.   இந்தியாவில் திரைப்படம், அர்த்தம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சமையல் குறிப்புக்கள் அதிகம் தேடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் தேடுதலில் ஈடுபட்ட மக்கள் மேகாலயாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள், அதற்கு அடுத்து திரிபுரா மற்றும் கோவா ஆகியவை உள்ளன.   இந்த தேடுதலில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த தேடல் 2300% அதிகரித்துள்ளன.   கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் தேடுதல் அதிகமாக இருந்துள்ளது.