சென்னை:
சென்னை மாநகராட்சியின் கொரோனா தொற்று நிலவரம் என்ன என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ எட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டுமே 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் 490 பேரும் , தண்டையார் பேட்டையில் 207 பேரும் , திரு.வி.க நகரில் 477 பேரும் , அண்ணா நகரில் 233 பேரும் , தேனாம்பேட்டையில் 343 பேரும் , கோடம்பாக்கத்தில் 546 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் மொத்தமாக 3043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel