சென்னை
வெளியூரில் உள்ளோர் மீண்டும் சொந்த ஊர் திரும்பத் தேவையான இ பாஸ் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று திரும்பி வர இயலாமல் உள்ளோருக்கு இ பாஸ் தமிழக அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில்,
“அன்பார்ந்த பொதுமக்களே,
நீங்கள் வெளியூரில் எங்காவது சிக்கி இருந்து உங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பினால் அதற்கான போக்குவரத்து அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க உங்கள் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட இணைய தள இணைப்பை மட்டுமே பயன்படுத்தவும்
உங்கள் சொந்த வாகனங்களில் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டிற்கு விண்ணப்பிக்கக் கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்
https://tnepass,tnega.org/
தமிழ் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளி மாநிலத்தவர்கள் அரசு போக்குவரத்தின் மூலம் சொந்த மாநிலத்துக்குச் செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்கு கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்தவும்
https//rtos.noresidenttamil.org/
வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அங்கிருந்து அரசுப் போக்குவரத்து மூலம் தமிழ்நாட்டுக்கு வருவதற்கான அனுமதிச் சீட்டுக்குக் கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்
https://rttn.nonresidenttamil.rg/
மற்ற சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்
9345168402 9566300846 9444920525 3080144760
கட்டணமில்லா உதவி எண்
1070, 1072 , 1 800 425 1333 (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை)
இந்த அவசரக்கால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பெருநகர சென்னை மாநகராட்சியைத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.