சென்னை:
கோயம்பேடு தொடர்புடையவர்கள் தாமாக பரிசோதனைக்கு  முன்வர வேண்டும் என்று துணை முதல்வர்  ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரவலுக்கு ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு சந்தை இருந்தது தெரிய வந்துள்ளது. தமிழகஅரசின் கையாலாகதனத்தால் கோயம்பேட்டில் முன்னதாகவே  அரசு  நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தொற்று தீவிரமாகி வருவதாக அரசியல் கட்சிகள்,  சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்,  கோயம்பேடு சந்தையை  தொடர்புடையவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  கோயம்பேட்டில் வியாபாரிகள்,  தொழிலாளர் களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  கோயம்பேடு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  பிற மாவட்ட  மக்களும் கோயம்பேடு தொடர்பிருந்தால்  தாமாக  முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள  ஒத்துழைக்குமாறு அன்போடுகேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.