மாஸ்கோ: ரஷ்ய தலைநகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை சுட்டிக் காட்டியுள்ள அந்நகர மேயர், அது மொத்த மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமே என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவிலேயே, தலைநகர் மாஸ்கோதான் அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட நகரமாக திகழ்கிறது. மாஸ்கோவின் மேயர் செர்கேய் சோப்யானின், தன் நகர மக்கள் கொரோனா பரவல் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு, மக்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
மாஸ்கோவின் தற்போதைய மொத்த மக்கள்தொகை 12.7 மில்லியன். அதாவது, 1 கோடியே 27 லட்சம். எனவே, இதில் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதானது, மொத்த மக்கள்தொகையில் வெறுமனே 2% மட்டுமே என்பது அவரின் வாதம்.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று கேட்கப்பட்டதற்கு, உலகின் பல முன்னணி நகரங்களுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது என்றுள்ளார் அவர்.