மதுரை:
தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடை விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் கோடை விழா கொண்டாடப்படும். இதையொட்டி, அங்கு மலர் கண்காட்சி உள்பட சுற்றுலாவாசிகளுக்கு படகுப்போட்டி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும். மேலும, அங்குங்ளள கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா, உள்ளிட்ட பல இடங்களைக் காண நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் அங்கு குவிவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மலர் கண்காட்சி உள்பட அனைத்தும் ரதது செய்யப்படுவதாக மாவட்டஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் கோடை விழாவின் சிறப்பான மலர் கண்காட்சி, படகு போட்டி என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.