சண்டிகர்:
பஞ்சாபின் சில பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாகி வருவதால் மே-3-க்குப் பிறகு மேலும் 2 வாரத்துக்கு பொது முடக்கத்தை (ஊரடங்கை) நீட்டிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது.
இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 322 ஆக உள்ளது. மேலும் இதுவரை 71 பேர் குணமாகி விடு திரும்பிய நிலையில், 19 பேர் பலியாகி உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் சில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் இருந்து வரும் நிலையில், அதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 2 வாரத்துக்கு பொதுமுடக்கத்தை நீட்டிக்க கேட்ன் அம்ரிந்தர் சிங் தலைமையிலான மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோல கடைகள் திறக்கவும் 4 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது.