பெய்ஜிங்: கொரோனா டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு கவலை அளிப்பதாக சீனா கூறி இருக்கிறது.
சீனாவின் ஒண்ட்போ, லைவ்சோன் ஆகிய 2 நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா சோதனை கிட்கள் தரம் குறைந்தவை என்று கூறி அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவித்தது.
அந்த கருவிகளை வாங்கிய சீன நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்புமாறும் ஐசிஎம்ஆர் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முடிவு கவலையை தருவதாக சீனா கூறி இருக்கிறது.
இது குறித்து சீன தூதரக அதிகாரி ஜிரேங் கூறி இருப்பதாவது: சீன மருத்துவத் தயாரிப்புகளில் தரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் முடிவு கவலை அளிக்கிறது.
பரிசோதனை கிட்கள் தரமானவை. ஐரோப்பா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.