சென்னை
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பானங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது உலகெங்கும் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்த கொரோனாவுக்கான தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளோருக்கு கொரோனா தாக்குதல் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையொட்டி தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையான ஆரோக்கியம் ஒரு சிறப்புச் செய்தி அளித்துள்ளது.
அந்த வெளியீட்டில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் குளிர்ந்த மற்றும் சூடான பானங்கள் விவரங்கள் வெளியிட்டுள்ளது.
தினமும் சூரிய குளியல், உப்பு கலந்த வெந்நீரில் வாய்க் கொப்பளித்தல், ஆவி பிடித்தல் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.