பெங்களூரு-

முகக்கவசம் அணியாததால் சி.ஆர்.பி.எப்., வீரரை கைது செய்த கர்நாடகா போலீசார் அவரை போலீஸ் ஸ்டேசனில் சங்கிலியால் கட்டி தரையில் அமர வைத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.


இளைஞர் ஒருவர் சங்கிலியால் கட்டப்பட்டு போலீஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

விசாரணையில் அந்த இளைஞர் பெல்லாகவி பகுதியில் ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் திரிந்ததால் அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்பட்டது.

பின்னர் அந்த இளைஞர யார் என்பது பற்றிய விசாரணையில், அவர் நக்சலைட்டுகளை ஒடுக்க கொரில்லா முறையில் தாக்கும் கோபுரா’ படைப்பிரிவில் பணியாற்றி வரும் சி.ஆர்.பி.எப். வீரர் சச்சின் சவந்த் என்பது தெரியவந்தது.

[youtube-feed feed=1]