மும்பை: இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பைகளை வென்று தரவேண்டுமென்பதை தனது தனிப்பட்ட இலக்காக அறிவித்துள்ளார் ரோகித் ஷர்மா.

அவர் கூறியுள்ளதாவது: அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பைத் தொடர்களில், இந்தியாவுக்காக 2 உலகக்கோப்பைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பது எனது இலக்கு.

நியூசிலாந்துக்கு எதிரான கடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், துவக்க விக்கெட்டுகளை இழக்காமல் வெற்றி பெற்றிருக்கலாம். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, முதல் 10 ஓவர்கள் முக்கியமானது.

மிடில் ஆர்டரில் இறங்கும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தால் மட்டுமே, அவர்களால் நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியும். அணியைத் தேர்வு செய்தல் மற்றும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில், கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு நெருக்கடி ஏற்படும் என்பது உண்மைதான்.

ஹர்பஜன்சிங், யுவ்ராஜ் சிங் போன்றவர்களுக்கு, முன்னாள் கேப்டன் கங்குலி வழங்கிய வாய்ப்புதான், அவர்களை பிரகாசிக்க வைத்துது” என்றுள்ளார் ரோகித் ஷர்மா.