வாஷிங்டன்: 1986ம் ஆண்டுக்கு பிறகு, உலகளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக உலக பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. பல முன்னணி நிறுவனங்கள் போதிய வருவாய் இன்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
உலக பொருளாதாரம் சரிவடைந்திருக்கும் அதே சூழலில் 1986ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்து இருக்கிறது. இது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதாவது, கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து எண்ணெய் விலைகள் 80% அல்லது ஒரு பீப்பாய் 50 டாலருக்கும் அதிகமாக குறைந்துவிட்டன.
டெக்சாஸில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 2 டாலர் குறைவாகவே வழங்குகிறார்கள். நியூயார்க்கில், மேற்கு டெக்சாஸில் 43% வீழ்ச்சியடைந்தது. ஒரு பீப்பாய் 10.34 டாலராக இருக்கிறது. இதுவும் 1986ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியாகும்.
விலை சரிவு எண்ணெய் தொழில் முழுவதும் எதிரொலிக்கிறது. தேவை குறைந்தாலும் கூட, உற்பத்தி அதிகரிப்பால், கச்சா எண்ணெய் வீழ்ச்சி மேலும் கீழ் நிலைக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.