கிரிக்கெட் வீரர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடலில், அரட்டையில் செலவிட்டு வருகின்றனர்.
இதில் நேற்று கேதார் ஜாதவ்விடம் தர்மசங்கடமான கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டார் சல்மானா, தோனியா யார் சூப்பர்ஸ்டார் என்று கேட்டார். இவருக்கு கிரிக்கெட்டில் பிடித்த ஆளுமை தோனி என்றால் சினிமாவில் பிடித்த ஆளுமை சல்மான் கான் ஆவார்.
இந்நிலையில் கேதார் ஜாதவ், “என்னைப் பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் என்பது இரண்டு வார்த்தைகள் எனவே இருவருமே எனக்கு சூப்பர் ஸ்டார்கள்தான். நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை, ஆனாலும் தோனியினால்தான் நான் இத்தனை காலம் கிரிக்கெட் ஆடி வருகிறேன்.
தோனியினால்தான் நான் சல்மான் கானைச் சந்திக்க முடிந்தது. எனவே தோனி முதல், சல்மான் இரண்டாவது. தாய் தந்தை இருவரில் யாரைப் பிடிக்கும் என்பதைப் போன்ற கடினமான கேள்வி இது” என்றார்.