https://www.instagram.com/p/B_CfrgdnUMQ/
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தலையணை சவால் வந்துள்ளது.ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
இந்த சவாலை ஏற்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பாயல் ராஜ்புட்.இந்த தலையணை சவாலை ஏற்ற முதல் தென்னிந்திய நடிகை பாயல் தான்.
ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட். அவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .