
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், ஏப்ரல் 20ம் தேதி முதல் இயங்கலாம் என்று அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.
ஊரடங்கு, மத்திய அரசால் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வருவதைப் பொறுத்து, ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை தளர்த்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற தனியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது, 50% பணியாளர்களைக் கொண்டு மட்டுமே, பட்டாசு தொழிற்சாலைகளை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel