கொரோனா வைரசிலிருந்து  பூஜ்யம் செலவில் தப்பிக்கலாம்…!

 

– எம். பி. திருஞானம் –

 

தமிழ்நாட்டில் பிறந்து.. வளர்ந்து.. இங்குள்ள பலகலைக் கழகங்களில் பயின்றவர்        Dr. அனுகாந்த்  அனுமந்தன் !

25 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நுண்ணியல் ஆய்வுக் கூடங்களில் பல ஆராய்ச்சிகள் செய்து புகழ்பெற்ற நுண்ணியல் விஞ்ஞானியான (MicroBiologist) Dr. அனுகாந்த், மக்கள் ஜனாதிபதியான Dr. அப்துல்கலாமின் பாராட்டைப் பெற்றவர் !

Dr. அனுகாந்த், சுத்தமான தமிழில், கொரோனா வைரசிலிருந்து, பூஜ்யம் செலவில் நம்மை பாதுகாத்துக்கொள்ளும் மிகவும் எளிமையான தமிழ் மருத்துவத்தை ஒலிவடிவத்தில் சொல்கிறார் ! கேளுங்கள் !

1. ஒரு கைப் பிடி அளவு வேப்ப இலை + 20/30 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்த  5 கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி, இரண்டையும் சுத்தமான தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்யவும்….

2. சுத்தம் செய்த இரண்டு மூலிகைகளையும் மிக்ஸியில் போட்டு, 100 ml தண்ணீர் சேர்த்து, மெல்ல – மெல்ல நாலு சுற்று மட்டும் ஓடவிட்டு, வெளியே எடுத்து, வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலும் 900 ml தண்ணீர் ஊற்றி, அது 500 ml அளவாக / அதாவது பாதி அளவாக  சுண்டும் வரை சுட வைக்கவும்.

3. பிறகு, ஆற வைத்து, வடிகட்டி, மூடி உள்ள பாத்திரத்தில், சேமிக்கவும்.

◆ வீட்டில் இருப்பவர்கள்,அனைவரும் தினசரி காலையில் பல் துலக்கியவுடன், 10ml அளவு மூலிகைச் சாறை மட்டும் எடுத்து, தொண்டைக் குழாயில் உள்ள உள் நாக்கு மீது (விழுங்காமல்) கசப்பு  சுவையான இந்த கஷாயத்தை ஊற்றி, 3 நிமிட நேரம் அங்கேயே நன்றாக நிறுத்தி, ‘காகில்’ செய்யவும். பின்னர், துப்பிவிட்டு, இளம் சூடான நீரில் வாய் கொப்பளிக்கவும்.

◆ வீட்டுக்குள் யார் வந்தாலும், அவர்களை இப்படி ‘காகில்’ செய்ய வைக்கவும்.

◆ வீட்டில் உள்ளவர்கள், வெளியே சென்று வந்தால், அவர்களும் மேலே சொன்னபடி ‘காகில்’ செய்ய வேண்டும் !

◆ ‘காகில்’ செய்ய முடியாத குழந்தைகள், வயது முதிர்ந்தவர்களுக்கு, ஒரு 5 ml கஷாயத்தை, ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும். ஆள்காட்டி விரலை சுடு நீரில் நன்றாக சுத்தம் செய்துகொண்டு, அந்த விரலால் கஷாயத்தை ஒரு சொட்டு தொட்டு, உள் நாக்கின் மீது கவனமாக வைக்கவும் [ விழுங்கக் கூடாது ]. இப்படி 2 முறை முதல் 4 முறை செய்யவும்.

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, மிகவும் கசப்பான இந்த கஷாயம் கொடுக்க வேண்டாம்.

◆ வேப்ப இலையும் கீழாநெல்லியும் மிகவும் கசக்கும் குணம் உள்ள கிருமி நாசினிகள். எனவே, இந்த மருந்தை பயன்படுத்திய பிறகு, கசப்பு சுவையை சமன் செய்ய, பனை அல்லது நாட்டு வெல்லம், தேன் இதில் ஏதாவது ஒன்றை நாக்கில் வைத்து, கொஞ்ச நேரம் சுவைத்து, பின் விழுங்கவும் !

இந்த கஷாயம்,கொரோனோ நோய்க்கான மருந்து அல்ல. கொரோனா மற்றும்
கொரோனா போன்ற வைரஸ்கள், நம்மை தாக்க முடியாதபடி, எதிர்த்து நின்று, வெற்றிகரமாக செயல்படும் தடுப்பு தமிழ் மருந்து !

இப்போது உலகத்தை மிரட்டிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் உயிர்களை பலி  வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மட்டுமல்ல; கொரோனாவின் அடுத்தடுத்த புதிய வைரஸ்கள் வந்தாலும், அவை உங்களை ஒன்றும் செய்ய முடியாது !

நீங்கள் 100% பாதுகாப்பாக இருக்கலாம் !

இணைப்பு : Dr. அனுகாந்த் அனுமந்தன் அவர்களின் வீடியோ