சென்னை:
புழல் அருகே காவாங்கரையில் உள்ள இலங்கை அகதி முகாமில் மறுவாழ்வுத்துறை துணை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரேனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்கள் வழங்கி வருகின்றன. அதுபோல முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கும் தமிழக அரசு ரேஷன் பொருட்களை நிவாரணமாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை தமிழக மறுவாழ்வுத்துறை இணை இயக்குனர், காவாங்கரையில் உள்ள அகதிகள் முகாமுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு அவர்களுக்கு பண விநியோகம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து அங்குள்ள மக்களிடையே கேட்டறிந்தார்.