
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.
சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.
ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு உலகின் பல முன்னணி நடிகர்கள் பலியாகியுள்ளனர் .
சமீபத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 70 வயதுடைய பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த 76 வயதாகும் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் மரணமடைந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆடம் ஸ்ஹெல்சிங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதன் வரிசையில் நகைச்சுவை நடிகர் டிம் ப்ரூக்-டெய்லர் 79 வது வயதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
டிம் ப்ரூக்-டெய்லர் பிபிசி ரேடியோ 4 இன் “ஐயாம் சோரி ஐ ஹேவன்ட் எ க்ளூ” இல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வழக்கமான குழு உறுப்பினராக இருந்தார், மேலும் 1970 களில் டிவியில் “தி குடீஸ்” மூலம் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
[youtube-feed feed=1]