பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அங்கு இந்த வைரஸ் நோய் கட்டுக்குள் வந்து இருந்தது.
இந் நிலையில் இப்போது மீண்டும் புதிதாக அங்கு இந்த வைரஸ் தொற்று நோய் பரவ தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 63 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அந் நாட்டின் சுகாதார ஆணைய தகவல்கள்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 52 பேர் ஆகும்.
சீனாவில் மொத்தம் 1280 பேர் கொரோனா பாதிப்பில் இருக்கின்றனர். 481 பேர் குணமாக, 700 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 36 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.