சென்னை
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் எழுத்தராகப் பணிபுரியும் 45 வயதுடைய ஒருவருக்கு சமீபத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்துள்ளார். அவர் மூலம் இத்தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது.
தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ‘ஊரக மருத்துவப் பணிகள் கழக அலுவலகம்’ உள்ளிட்ட மாநில அரசின் பல்துறை அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது 911 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel