ஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்..
கர்நாடக மாநில அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர், மல்லப்பா.
பல்லாரி பணிமனையில் 12 ஆண்டுகளாக உத்தியோகம்.
இரு தினங்களுக்கு முன் மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் கடைக்குச் சென்று விட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
விஜயபுரா அருகே சோதனை சாவடியில் அவரை மடக்கியது போலீஸ்.
’’ஊரடங்கை மீறி ஏன் ஊர் சுற்றுகிறாய்?’’ என்று போலீசார் கேட்க, ‘நான் அரசு பஸ் கண்டக்டர்’’ என்று மல்லப்பா வீராப்பு காட்ட-
ஒரே ரசாபாசம்.
பின்னர் அவர்கள் வீடு போக அனுமதிக்கப்பட்டனர்.
’’வழியில் மீண்டும் வேறு போலீசார் மறித்து விவகாரம் செய்தால் என்ன செய்வது ?’’ என்று யோசித்தார், மல்லப்பா.
மனைவி மற்றும் குழந்தையைச் சாலை வழியாக அனுப்பிய மல்லப்பா, ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள தனது வீட்டை அடைய அங்கே ஓடும் கிருஷ்ணா நதியை நீச்சல் மூலம் கடந்தார். .
கையை துடுப்பாக்கி நீந்தினார்.
நதியின் ஆழமா? அல்லது அவரது பொல்லாத நேரமா? என்று தெரியவில்லை.
நதியில் மூழ்கி இறந்தே போனார், மல்லப்பா.
– ஏழும்லை வெங்கடேசன்