புது டெல்லி:
டெல்லி கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லியின் 20 இடங்களில் முழு லாக் அவுட் அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலைகளில் நடமாடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி கேன்சர் இன்ஸ்டிடியுட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 கேன்சர் நோயாளிகளுக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel