சென்னை

கொரோனாத் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக ஏப்ரல் 14 க்குப் பிறகே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

“மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 10 நாட்களில் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களின் தேர்வு மையங்கள் மாற்றப்படும். மாணவர்கள் தக்க முறையில் தங்களை தேர்விற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே தேர்வு குறித்து நிலவிய குழப்பம் நீக்கியுள்ளது.