ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல விளையாட்டுத் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், உலக பேட்மின்டன் சாம்பியனாக 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்பு இந்திய நட்சத்திரம் சிந்துவுக்கு கிடைக்கவுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொண்டு கோப்பை வென்றார் சிந்து.

பொதுவாக, ஒலிம்பிக் நடைபெறக்கூடிய ஆண்டுகளில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்காது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டதால், 2019, 2020 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு உலக பேட்மின்டன் சாம்பியனாக நீடிக்கும் வாய்ப்பு சிந்துவுக்கு கிடைத்துள்ளது.

தற்போது தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சிந்துவிடம் இதுபற்றி கேட்டால், “எங்களைப் பொறுத்தவரை போட்டிகள் எப்போது துவங்கும் என்பதில்தான் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.