புதுடெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி சொல்லும் டூடுல் ஒன்றை கூகுள் தேடுதளம் உருவாக்கி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வரும் வேளையில் அது மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியாக கூகுள் டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கூகுள் தேடுதளத்தில் தோன்றும் டூடுலை கிளிக் செய்தால்,
1. வீட்டில் தங்கியிருங்கள்
2. பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்
3. கைகளை அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்யுங்கள்
4. இருமல் வரும்போது வாயை மூடிக் கொள்ளுங்கள்
5. உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்
என்று வரிசையாக பாதுகாப்பு வழிமுறைகள் வருகின்றன. கூகுளின் இந்த முயற்சியும் வரவேற்பைப் பெற்றுள்ளது.