கடலூர் :
டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 411ஆக உய்ர்ந்து உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், டெல்லி மாநாடு சென்று வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த17 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னும் 23 பேரின் முடிவுகள் நாளை தெரியும் என்று கூறி உள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 35 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறினார்.