சென்னை

கொரொனா நிவாரணத் தொகையான ரூ.. 1000 வீடு வீடாகச் சென்று வழங்கத் தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அந்த தொகையைப் பெற வீடு வீடாக நேற்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.

குறிப்பிட்ட தினங்களில் ரேஷன் கடைகளுக்கு வந்து அந்த தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஒரே நேரத்தில் பலரும் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இதையொட்டி தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி,ஏப்ரல் 7 முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையான ரூ. 1000 வழங்கக் கூடாது

பதிலாக வீடு வீடாகச் சென்று ரூ.1000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

ஏற்கனவே டோக்கன் வாங்கியவர்களுக்கு நாளை ரேஷன் கடைகளில் ரூ. 1000 வழங்கப்பட உள்ளது.

என அறிவிக்கப்பட்டுள்ளது.