புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு போன்ற களேபரங்களால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களில், தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு புதிய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறைகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 37 உறுப்பினர்கள் ஊரடங்கு காலம் முடியும் வரையில் பதவியேற்பு வைபவத்திற்காக காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.