டெல்லி:
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்தனர்.
Zoom மீட்டிங் செயலி என்ற பிரத்யேக செயலி வாயிலாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று நடைபெற்றது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த காணொளிக் காட்சி கூட்டத்தில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், காணொளி காட்சி மூலம் பேசிய சோனியா காந்தி, கொரேனா வைரஸ் பரவலின் தாக்கம், இதுவரையில்லாத அளவுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது நமக்கு முன்னாள் பெரும் சவாலாக உருவெடுத்து, அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தவர், அந்த சவால் முடியறிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவலை முறியடிக்கப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.