டெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் முதன்முதலாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நபர் டெல்லி முஜாகிதீன் மாநாட்டில் கலந்துகொண்டவர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 151 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் 1764 பேர் உள்ளனர்.
இநத் நிலையில், இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்படாத அருணாச்சல பிரதேச மாநிலத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நபர், டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel