வாஷிங்டன்
கொள்ளை நோய் தாக்குதல் குறித்துக் கடந்த 2019ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையின் பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார ஆலோசகர்கள் கொரோனாவால் ஏற்பட உள்ள உடல்நலம் மற்றும் பொருளாதார அபாயம் குறித்து கவனம் கொள்ளாமல் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அதிபரின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் தற்காலிக தலைவர் தாம்ச்ன் பிலிப்சன், “மக்கள் நினைக்கும் அளவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது. “ என அறிவித்தார். அன்று வந்த தகவலின்படி அமெரிக்க சொகுசுக் கப்பலில் பயணம் செய்த சிலருக்கு வைரஸ் தொற்று உள்ளதாகத் தகவல்கள் வெளி வந்தன. ஆயினும் கொரோனா சாதாரண காய்ச்சலுக்கு ஈடானது என தாம்ஸன் கூறினார்.
ஆனால் கடந்த 2019 ஆம் தேதி அதிபரின் ஆலோசகர்களான பொருளாதார நிபுணர்கள் வேறு விதமான அறிக்கை அளித்துள்ளனர். இந்த அறிக்கையை அளித்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் தற்போது பணியை விட்டு நீங்கி உள்ளார். ஒரு கொடுமையான கொள்ளை நோய் தாக்கத்தால் அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் எனவும் இதனால் 2 முதல் 8 மாதங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக அமைப்புக்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அரசு பொருளாதாரத்தை மனதில் கொள்ளாமல் மக்கள் நலனை மனதில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேசிய பொருளாதாரக் குழு இயக்குநர் லாரி குட்லோ, “நாட்டில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் நான்கு வாரங்களில் திறக்கப்படலாம் அல்லது எட்டு வாரங்களும் ஆகலாம். இதை நான் நம்பிக்கையுடன் மட்டுமின்றி கடவுளை வேண்டியபடியும் சொல்கிறேன்” எனக் கூறி உள்ளார்.